அடிவயிற்றில் தங்கியுள்ள
கொழுப்பை
குறைக்க
வேண்டுமா?
இதோ
10 வழிகள்!
combatஇன்றைய
இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை
குறைக்க படும் பாடுகளை சொல்லி
மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக
இருப்பதை அதை விட பெரிய
குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.
இந்த குறையை தீர்க்க ஏதேனும்
வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள்
நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில
குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.
சரியாக சாப்பிடுதல்
சரியான
முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான
மற்றும் சீரான உணவு முறையை
பின்பற்றும் போது இதை நாம்
சாதிக்க முடியும். தேவையான அளவு நுண்
மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை
சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை
உணவுகள், துரித உணவுகள் ஆகிய
கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால்
தடியான வயிறை தட்டையான வயிறாக
மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக
வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து
உண்ணுங்கள்.
தண்ணீர்
தாகம்,
அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி
தெளிவாக உணராத சிலர் பசிக்கும்
போது நிறைய சர்க்கரை கொண்ட
உணவை உண்டு எடையை தங்களை
அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம்
உள்ள உணவை பசியில் விரைந்து
உண்கின்றனர். இது தவறு. எப்போதும்
ஒரு தண்ணீர் பாட்டிலை கையில்
வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது
குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள்
எடை மற்றும் வாழ்க்கை முறையை
சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை
கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை
கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க
வேண்டும்.
உடற்பயிற்சி
பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில
No comments:
Post a Comment